2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் நடமாடும் மனித உரிமை அலுவலகம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நலன் கருதி, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தின் ஏற்பாட்டில் நாளைமறுதினம் புதன்கிழமையிலிருந்து கிளிநொச்சியில் நடமாடும் அலுவலகம் செயற்படவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகப் பணிப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. இதனால் மக்களின் பணம் மற்றும் நேரம் வீணாகின்றது. இதனைக் கவனத்திற்கொண்டு மனித ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் கிளிநொச்சியிலுள்ள மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் கட்டிடத்தில் புதன்கிழமை தோறும் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிவரை நடமாடும் சேவையை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நடமாடும் அலுவலகமானது மனித உரிமை ஆணைக்குழுவின் வட பிராந்திய ஆணையாளர் ஆனந்தராஜாவின் பணிப்பிற்கமைய நடத்தப்படவுள்ளது.   எதிர்வரும் காலத்தில் இந்நடமாடும் அலுவலகத்தை கிளிநொச்சியில் நிரந்தரமாக செயற்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகப் பணிப்பாளர்  குறிப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X