2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திவிநெகும கடன் திட்டத்தின் முதலாவது பயனாளிக்கு ஊபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகுமத்திட்டத்தின் கீழான வங்கிக்கடன் இன்று புதன்கிழமை காலை பிரதேச அபிவிருத்தி வங்கியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்நிகழ்வில், சத்துருக்கொண்டானைச் சேர்ந்த வாகன இருக்கைக்கான குசைன் செய்தல், மற்றும் அழகுபடுத்தல்கள், சோபா இருக்குக்கைகான குசைன் செய்தல், புத்தகப் பைகளைத் தயாரித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வரும் சத்தியபாலன் என்பவருக்கு இக் கடன் திட்டத்தின் கீழ் மோட்டார், மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் அதற்கான வங்கிக் கணக்குப் புத்தகமும் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் கே.சந்தானம், மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் சத்தியநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X