2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக யாழில் எல்.ஈ.டி வோல்ட் திரை அமைப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

ஹற்றன் நெஷனல் வங்கியின் அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பொது மக்கள் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் எல்.ஈ.டி வோல்ட் திரை அமைக்கப்பட்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி காண்பிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் உள்ள மாநகரசபை வளாகத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன இதற்கேற்ற வகையில் இன்று வியாழக்கிழமை விசேட இசைநிகழ்வு நடைபெறவுள்ளதாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X