2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளுக்காக யாழின் சில பகுதிகளில் மின்தடை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                             (எஸ்.கே.பிரசாத்)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், நாளை சனிக்கிழமை புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, விஞ்ஞான பீட, மருத்துவ பீடப் பிரதேசங்கள், பலாலி வீதி, கந்தர்மடம், வைமன் வீதி, முலவை, கச்சேரியடிப் பிரதேசம், நல்லூர், கோவில் வீதி, றக்கா வீதி, 1ம்,2ம்,3ம் குறுக்கு வீதிகள், மாட்டின் வீதி, ஸ்ரேசன் வீதி, கச்சேரி நல்லூர் வீதி, வளம்புரம், பாண்டியன்தாழ்வு, ஈச்சமோட்டை, பழைய பூங்கா வீதி, இராசாவின் தோட்டம், நாவலர் வீதி, ஸ்ரான்லி வீதி, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு ஆகிய இடங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி, மந்திகை, சாரையடி, தம்பசிட்டிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, பருத்தித்துறை நகரப் பிரதேசம், உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், யாழ்.மாநகரசபைப்பகுதி, யாழ்.பட்டணப்பகுதி, ஸ்ரான்லி வீதி, கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு, கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், பிரதான வீதி, கொன்வன் பிரதேசம், பண்ணைப் பிரதேசம, கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய இடங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் தடைப்டும் என்றும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .