2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திமுது ஆடிகலவின் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் மீது யாழில் கழிவு எண்ணெய் வீச்சு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த  முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் திமுது ஆடிகல உட்பட சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம், கலட்டிப்பகுதியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதாற்காக வருகை தந்த மேற்படி அமைப்பினர், நிகழ்வில் கலந்துகொண்டு இன்று கொழும்புக்கு செல்வதற்கு முன்னர் நல்லூருக்குச் சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்கள் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தியதாக சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பின் தலைவி திமுது ஆடிகல தெரிவித்தார்.
 
இந்தத் தாக்குதல் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளதாக திமுது ஆடிகல மேலும் கூறினார்.



  Comments - 0

  • Sumathy M Monday, 08 October 2012 01:45 PM

    யாரைய்யா இந்த இனந்தெரியாதவர்கள்? என்னத்துக்கு .மறைக்கிரீன்கள்? சனத்துக்கு உண்மையை சொல்லவேண்டியது தானே
    சுமதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X