2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கை காரணமாக தொழில் வளங்கள் பாதிக்கப்படுவதாக எமது கடற்தொழிலாளர் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு எமது வளங்களும் அழிக்கப்படுவதாக கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபை, இது தொடர்பாக கூடிய கவனமெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை எமது மக்களின்  பிரதான பிரச்சனையாக கருத்தில் கொண்டு அந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் இது தொடர்பாக பேச்சு நடத்தவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஒருங்கிணைப்புக் குழு. யாழ் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X