2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பருத்தித்துறை இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடை நிறுத்தம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை ஊழியர்கள் இன்று மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பஸ் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.

சம்பள பிரச்சினைகளை திர்க்கக் கோரி ஊழியர்களனால் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையினை, இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு பிராந்திய பிரதான பொது முகாமையாளர் எஸ்.அஷ்ஹர், ஊழியர்களுடன் கலந்ரையாடி தொழிற்சங்க போராட்டத்தினை இடை நிறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாத சம்பளம் தற்போது வழங்குவதாகவும், இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு 12ஆம் திகதியும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X