2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான 500 பரப்பு காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார்.

வலி கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான 500 பரப்பு காணி இராணுவத்தால் பிரதேச சபையின் அனுமதியின்றி ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊரெழு பொக்காணை, நீர்வேலி பன்னாலை, அச்சுவேலி தம்பாலை மற்றும் கோப்பாயில் பழைய மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களில் உள்ள காணிகள் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த காணி ஆபகரிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் மேலம் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X