2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வட்டுக்கோட்டை முத்தமிழ் சங்கத்தின் முத்தமிழ் விழா

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரூபன், கு.சுரேன்


வட்டுக்கோட்டை முத்தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிவன் மேலை வீதியில் முத்தமிழ் விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சு அருமைநாயகமும் சிறப்பு விருந்தினராக யாழ.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவும் கலந்துகொண்டனர்.

சிற்பம், கூத்து. ஓவியம், நடனம் ஆகியவற்றில் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் சிறந்த விளங்கிவரும் 8 கலைஞர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் கலைஞர் புவனசுந்தரன் எழுதிய கவிதைக் கதம்பம் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X