2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்: அசோக் கே. காந்தா

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 25 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஜேனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது  இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள  தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்குகான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இன்று திங்கட்கிழமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அக்கலந்துரையாடலின் போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் தமிழரசு கட்சியின் துணைச் செயலளார் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருப்பதாகவும் 13ஆவது திருத்தினை முன்வைத்த இலங்கை அரசாங்கம் அதனை தர மறுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளி;த்த அசோக் கே. காந்தா, 'தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள இந்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, இதற்கான தீர்க்கமான முடிவினை அரசாங்கம் எடுக்குமென்றும், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இந்தியா வாக்களிக்கும்' எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X