2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். அரியாலை பகுதி கிராம அலுவலரின் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். அரியாலை கிழக்கு கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு கண்டித்து இன்று நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, அரச அதிபரே ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை,நீதியாக வேலை செய்தவருக்கு அநீதி ஏன், நீதியான விசாரணை செய், உடன் கைதுசெய் தண்டணை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினையும் கண்டணத்தினையும் வெளிப்படுத்தினர்.

கடந்த 14 ஆம் திகதி J/90 கிராம அலுவலர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததையிட்டு பொலிஸாரினால் தாக்குதல்  சூத்திரதாரிகளை கைது செய்யப்படவில்லை என்றும் அநீதி இழைத்தவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய மகஸர் அரச அதிபர் சார்பாக நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்கப்பட்டது.

அம்மகஸரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிராம அலுவலர் தாக்கப்பட்டமைக்கான சட்டநடவடிக்கைiயினை துரிதமாக மேற்கொண்டு தாக்கியவர்களுக்கான தண்டனையினை வழங்க வேண்டும்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற சமபவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அமைச்சர், அரச அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிரதேச செயலாளர் ஊடாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாகவும் அம் மகஸரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரவீந்திரதாசன், நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் வ.ஸ்ரீகணேசா, மகளீர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் உட்பட கிராம அலுவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X