2025 ஜூன் 18, புதன்கிழமை

குஷன் கடையில் தீ

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,-சுமித்தி தங்கராசா


யாழ். ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள குஷன்  கடை ஒன்றில்; இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அந்தக் கடையில் இருந்த ஒருதொகுதி பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கடையின் ஒரு பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் மின்னொழுக்குக் காரணமாகவே இந்த தீ பரவியுள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார். 

இந்த தீ விபத்துக் காரணமாக 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .