2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்கள் சேகரிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

யாழ்.மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான தகவல்களை திரட்டும்பணியில் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடற் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்.

இதுதொடர்பான விபரங்களை விரிவாக அனுப்பி வைக்கும்படி யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு யாழ்.செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் இடம்பெற்ற வலி வடக்கு தென்மராட்சியில் உள்ள சில கிராமங்கள், வடமராட்சியில் சில கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாத நிலமை காணப்படுகின்றது.

தற்போது மின்சாரம் பெற்றவர்கள், பெறவேண்டியவர்கள், மின்சாரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்கள் போன்றவர்களின் விபரங்கள் யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களினால் கிராம அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X