2025 ஜூன் 18, புதன்கிழமை

முகமாலையில் மிதிவெடி வெடிப்பு; பணியாளர் படுகாயம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

முகமாலையில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடியொன்று வெடித்ததில் பணியாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினரால் முகமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிதி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாங்குளம், ஒலுமடுவைச் சேர்ந்த தங்கராசா நிதர்சன் (வயது 21) என்பவரே படுகாயமடைந்த நிலையில் ஏனைய பணியாளர்களினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .