2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விரைவில் கட்டுப்படுத்தப்படும்: கடற்படை

Menaka Mookandi   / 2013 மார்ச் 11 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்காதவாறு தடை செய்தவற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொன்னாலை கடற்படை முகாமில் நடைபெற்ற கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது இலங்கை கடற்பரப்பில் கடற்படையின் படகுகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ரோந்து நடவடிக்கையின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் தொழிலுக்கு வராதபடி இலங்கை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

  Comments - 0

  • kk Monday, 11 March 2013 12:25 PM

    நாங்க அடிக்கிற மாதிரி நடிப்போம்....அவங்க அடி வாங்குற மாதிரி அழுவாங்க.... அம்புட்டுதான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X