2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யு.எஸ்.எய்ட்   நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பிராந்திய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டோன் ஹெய்டன் கலந்துகொண்டு பயிற்சிபெற்ற கடற்தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களையும் மழைக்கவசங்களையும்   வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 79 கடற்தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பிராந்திய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டோன் ஹெய்டன், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கணேச மூர்த்தி மற்றும் யு.எஸ்.எய்ட் நிறுவன பிரதிநிதிகள் கடற்தொழிலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X