2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நகர பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நடைபெற்று வருகின்றது. யாழ். மாநகர ஆணையாளர் எஸ்.பிரணவநாதனின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலகத்தினால் வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தினமும் காலை 8 மணிமுதல் 8.30 மணி வரை வீதி சமிஞ்ஞைகள் மற்றும் வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன. வீதி விபத்தினை எவ்வாறு கட்டுப்படுத்தல், மாணவர்கள் வீதிகளில் சமாந்தரமாக செல்லுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கங்கள் மற்றும் குறியீடுகள் காண்பிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இக்கருத்தரங்கில், யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா மற்றும், யாழ். பொதுநூலக உதவி நூலகர் கே.எம. நிஷாந் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கினை முன்னெடுத்துச் வருகின்றார்கள்.

இந்நிலையில், நாளை காலை யாழ். நாவலர் மகா வித்தியாலயத்தில் வீதி போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X