2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

காணி அற்றவர்களுக்கு காணி வழங்குவதாக உறுதி

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கனகாம்பிகைக்குள கிராமத்தில் காணிகளின்றி வாழ்ந்துவரும் 40 குடும்பங்களுக்கும் பிரதேத்தில் அரச காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமாகிய முருகேசு சந்திரகுமார் இன்று தெரிவித்தார்.

கனகாம்பிகைக்குளம்; கிராம பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மக்கள் தமது கிராமத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்கள் குறித்தும் தமது தேவைகள் குறித்தம் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதன்போது, கருத்து தெரிவிக்கையில், இக்கிராம மக்களுக்கு 145 நிரந்தரவீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டுத் திட்டங்களை பெறாதவர்களுக்கு வீட்டத்திட்டம் வழங்குவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டார.

அத்தேர்டு இப்பகுதியில் 120 இலட்சம் ரூபா செலவில் சேவிஸ் வீதி புனரமைக்கப்படடுள்ளது.  ஏனைய வீதிகளான 14ஏ, 14பி ஆகிய வீதிகளை புனரமைப்பதற்கும் குறித்த வீதியில் அமைந்துள்ள மாரப்பாலத்தினை புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், என்றும்  அவர் கூறினார். இதேவேளை, உயிரிழந்தவர்களின் இழப்பீடுகளைப் பெற்றிராத குடும்பங்களுக்கு அவற்றைபெற்றுக் கொடுப்பதற்கும், விவசாய ஓய்வுதியங்களை பெறாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு 2012 ஆம் அண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  அப்பகுதி பாடசாலைக்கு; ஓலிபெருக்கித் தொகுதியினை பெற்றுக் கொடுத்திருந்த நிலையில் இவ்வருடம் பாண்ட் வாத்திய அணியினருக்கான சீருடையினை பெற்றுக் கொடுப்பதற்கு 50ஆயிரம் ரூபாவினை ஒதுக்Pடு செய்ததுடன், பாடசாலைக்கான ஆசிரியர் விடுதி வகுப்பறைக் கட்டட  வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன், தூயதமிழ் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவும் தனது 2013 ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா ஐம்பதாயிரத்தை ஒதுக்கீடு செய்தார். அத்தேர்டு அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட மேலும் பலதேவைகளை நிறைவு செய்வது குறித்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும்  உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில், கரைச்சிபிரதேச செயலர் நாகேஸ்வரன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல், கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை உதவி ஆனையாளர் தயாரூபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், நீர்ப்பாசணத் திணைக்கள பொறியியலாளர் விகிர்தன் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிராம சேவையாளர் திருமதி கனகசபை, ஆகியோரும் அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பெருமளவான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X