2025 ஜூன் 18, புதன்கிழமை

இந்திய- குழுவினர் வடமாகாண அமைச்சின் பிரதம செயலாளர் சந்திப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கரசா


யாழ். வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடமாகாண  அமைச்சின் பிரதம செயலாளரைச் சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை சார்பில் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .