2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யுத்தத்திற்கு வழி சமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: சம உரிமை இயக்கம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அணிதிரளுமாறு சம உரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தின் அச்சிடும் பகுதி மீது துப்பாக்கி தாரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முகமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலே;யே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்துடன் உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் வெட்கம் கெட்ட அடக்குமறைகளுக்கான சில செயற்பாடாக இத்தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்கள மொழியில் பேசியவர்கள் என கண்கண்ட சாட்சியங்கள் கூறியிருக்கின்றன. இத்தாக்குதல் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலக முடியாது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் இனவாத சக்திகளின் பக்கம் ஈர்க்கப்படும் சமத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒற்றுமை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் சூழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

இதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களினதும் ஒற்றுமை தேவைப்படுகிறது. தமிழ் மக்களை இனவாத மற்றும் அடிப்படைவாத திசைக்குள் தள்ளிவிடுவதேயன்றி கட்டியெழுப்பும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது இப்படியான சம்பவங்களின் மூலம் வெளிக்காட்டப்படுகிறது.

இந்த நிலைமையில் இனவாதம் மேலும் வளர்ச்சியடைந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையிலான இடைவெளி அதிகரித்து அதனூடாக கொடுமையான யுத்தமொன்றுக்கு வழி சமைப்பது இலங்கை சமூகத்திற்கு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி தரக்கூடும்.

இவ்வாறான மனிதத் தன்மையற்ற காடைத்தனத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பிரஜைகள் மத்தியில் மோதலை உருவாக்குவதற்கும், பத்திரிகை நிறுவனத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்பவர் வெளித்தசத்திற்கு  கொண்டு வருவதற்காக அமைப்பு ரீதியில் தலையிடுமாறும் ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஜனநாயத்ததை மதிக்கும் சக்திகளிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X