2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸுடன் பேச்சு

Super User   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாண உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரிகள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்திற்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடன் மேற்படி வி;டயம் தொடர்பில் நேற்றைய தினம் ஆராயப்பட்டது.

உடற்கல்வி டிப்ளோமா நெறியினை பூர்த்தி செய்த வட மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் தமக்கான நிரந்தர நியமனங்கள் குறித்து அமைச்சரிடம் தெளிவுபடுத்தினர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர், நிரந்தர நியமனங்கள் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X