2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடசாலை மட்டத்திலிருந்து இரு மொழி கொள்கை

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் விவாத போட்டிகளை நடத்தி அதன் மூலம் இரு மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அரச கருமமொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர்.ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரச மொழிக் கொள்கைத் திட்டத்தினை வட மாகாணத்தில் அமுல்படுத்துவது தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அரச கருமமொழிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜீ.யு.அபேகோன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பி. பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதே நிமால்.ஆர். ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாடளாவிய ரீதியில் 72 பிரதேச செயலகங்களில் இருமொழிக் கொள்கை நடைமுறையிலுள்ளதுடன், வர்த்தமானியில் 42 பிரதேச செயலகங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

வட மாகாணத்தில் இரு மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கு 4 சிங்கள மாணவர்கள் மற்றும் 4 தமிழ் மாணவர்கள் என பாடசாலை ரீதியாக தெரிவு செய்து அவர்களுக்கிடையில் விவாதப் போட்டிகள் நடத்தவுள்ளோம்.

இதன் மூலம் தமிழ் மாணவர்கள் சிங்களம் கற்பதற்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் கற்பதற்கும் உறுதுணையாகவிருக்கும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இரு மொழிக் கருமபீடங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் போக்குவரத்து மற்றும் மருத்துவத் துறையில் இரு மொழிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆய்வும் மேற்கொள்ளவுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .