2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வட மாகாண முதலமைச்சர் பேச்சு நடத்த  வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபை தலைவர் இ.தேவசகாயம் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று செவ்வாய்கிழமை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இன அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடன் கதைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

நகர சபை உறுப்பினர் அருணாச்சலம் பால மயூரனினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு நகர சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .