2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வட மாகாண சபை தவிசாளராக சிவஞானம் தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

வட மாகாண சபையின் தவிசாளராக கந்தையா சிவஞானம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மாகாண சபையின் கன்னியமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது, சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்காக கந்தையா சிவஞானத்தின் பெயரினை மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதனையடுத்து கந்தையா சிவஞானம வட மாகாண சபையின் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதேபோன்று சபையின் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்காக அன்ரனி ஜெகநாதனின் பெயரினை மாகாண சுகாதர அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் முன்மொழிய மாகாண கடற்தொழில்  அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் வழிமொழிந்தார். இதனையடுத்து அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .