2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அனந்தி சசிதரன் அமெரிக்கா விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .