2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொதுநலவாய மாநாட்டுக்கு இதுவரையில் அழைப்பில்லை: சி.வி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

பொதுநலவாய மாநாடு தொடர்பில் கலந்துகொள்வது தொடர்பில் அழைப்புக்கள் எதுவும் இதுவரை வரவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரை இன்று புதன்கிழமை காலை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை எந்த அழைப்புக்களும் வரவில்லை. ஆனால் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வருகின்றன.

இனி வரும் காலத்தில் அழைப்புக்கள்  வந்தால் அந்த நேரத்தில் அதைப் பற்றி யோசிப்போம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .