2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

யாழ். பொது நூலகத்திற்கு தேசிய விருது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த ஒழுங்குபடுத்தல் மற்றும் தரமான ஆவணப்படுத்தல் தேர்வில் யாழ். பொது நூலகம் தேசிய விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளது.

கல்விச்சேவைகள் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபையினால் இந்த விருது வழங்கல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், சிறந்த நூலகங்களை நிர்வகிக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கிடையிலான தேர்வில் யாழ். பொது நூலகத்தை நிர்வகிக்கும் யாழ். மாநகரசபை அதற்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது.

யாழ். பொதுநூலகம் இவ்வாறானதொரு தேசிய விருதினை 1981ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டதன் பின்பு மீண்டும் தற்போது பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .