2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து ஐரோப்பிய தூதுவர் ஆராய்வு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இந்திய மீனவர்கள் இழுவைப்படகின் அத்துமீறல்கள் தொடர்பாக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய தூதுவர் டேவிட் டலி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (01) காலை விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய தூதுவர் மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததுடன், நிரப்பப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து  அரச அதிபர் பதிலளிக்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் நகர்ப்புறங்களை அண்டியே மேற்கொள்ளப்படுகின்றதுடன் கிராமப்புறங்களை மையமாக வைத்து மேற்கொள்ள அக்கறை செலுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்களாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜரோப்பிய தூதுவர் டேவிட் டலி, 'எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான சூழ்நிலைகளை ஆராய்வதற்காக வருகை தந்துள்ளதென்றும், இவ்வாறான வேலைத்திட்டங்களை ஆராய்ந்த பின்னர், அவ்வேலைத்திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்புக்கு பின்னர், யாழ். மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யாழ். சின்னத்தினை பார்வையிட்டதுடன், வடமாகாண வரைபடத்தினையும் பார்வையிட்டு, இந்திய மீனவர்கள் எந்த பகுதியின் ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதாக அரச அதிபரிடம் கேட்டறிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .