2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்: சமன் சிகரோ

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான நிசங்க சமன் சிகரோ தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (01) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தென்னிலங்கையில் இடம் பெறும் குற்றங்களை விட மிகவும் குறைந்தளவிலேயே யாழ்ப்பாணத்தில் குற்றங்கள் இடம்பெறுகின்றதுடன், குற்றச் செயல்களுடன் தொர்புடையவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.

மேலும் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுவதுடன் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையிலுள்ள உறவுகளை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்' அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X