2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆவரங்கால் சிவன் கோயிலில் கொள்ளை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை வீதி ஆவரங்காலில் அமைந்துள்ள சிவன் கோவிலின் ஓடு பிரித்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று (04) காலை ஆலயத்திற்கு பூஜை செய்வதற்காக சென்ற போது ஆலயத்தின் மேற்கூரை ஓடுகள் விலக்கப்பட்டிருப்பதை அவதானித்தார்.

பின்னர் ஆலயத்திலுள்ள பொருட்களை பார்த்த போது அர்ச்சனைத்தட்டுக்கள், தீபங்கள், மணிகள் உள்ளிட்ட 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டமை தெரியவந்தது.

இது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .