2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராணுவத் தலைமையத்தையே கொடுத்த முடிந்தால் மக்களின் காணிகளை மட்டும் ஏன் விடுவிக்க முடியாது: தம்பிராசா

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


இராணுவத் தலைமையத்தினை வெளிநாட்டு முதலீட்டுக்காக கொடுத்த அரசாங்கத்தால் எங்கள் மக்களின் காணிகளை மட்டும் ஏன்  விடுவிக்க முடியாது என்று வடமாகாண சபையின் முன்னாள் வேட்பாளர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கு கட்டுவன் பகுதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் வீடழிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் கடந்த வியாழக்கிழமை முதல் இவர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.

தம்பிராசாவின் உண்ணாவிரத போராட்டத்தினை காணமற்போனவரொருவரின் உறவினர் ஒருவர் இளநீர் வழங்கி நேற்று மாலை 4.00 மணிக்கு முடித்து வைத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு கருத்து தெரிவித்த தம்பிராசா,

25 வருடங்களாக எமது மக்கள் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அம்மக்களிற்கு இராணுவத்தினர் மாற்று இடமொன்றை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதனை ஒரு போதும்  ஏற்றுக்கொள்ள முடியாது . இராணுவத்தலைமையகம் இருந்த இடத்தை வெளிநாட்டு முதலீட்டுக்காக வழங்கிய அரசாங்கம் ஏன் எங்கள் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது.

எமது ஜனாதிபதி நல்ல மனிதரும் ஒரு யதார்த்தமானவர் அவரிடம் எங்கள் பிரச்சனை தொடர்பில் தெளிவுபடுத்தினால் அவர் இதனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருக்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வலி.வடக்கு மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனை தொடர்பில் தனது கோரிக்கைகளை அடங்கிய மகஜர் ஒன்றினை ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம்; கையளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .