2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து எம்.பி.க்களுடன் - முதலமைச்சர் சந்திப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் யான் லொக்கி ஆகியோர் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனும் கலந்துகொண்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .