2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேர்க் கட்டிடத்திலிருந்து சடலம் மீட்பு; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ். நாச்சிமார் ஆலய தேர்க் கட்டிடத்திலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் (17)  மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நபரை எதிர்வரும்  டிசெம்பர் மாதம் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபருக்கு எதிரான வழக்கு விசாரணை  இன்று திங்கட்கிழமை  யாழ். நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போதே இந்தச் சந்தேக நபரை டிசெம்பர் மாதம் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .