2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஈகைச்சுடர் ஏற்றிய இருவர் கைது

Super User   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் இரு இளைஞர்கள் இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

 பூநகரி, முக்கொம்பன் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் முகுந்தன் (33 வயது), கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் பிரியதர்சன் (30 வயது) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று மாலை 06.05 மணியளவில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமையாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .