2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வீட்டில் பணமும் தங்கநகையும் திருட்டு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அலேசியஸ் நிதர்சன்

யாழ். கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பணமும் தங்கநகையும் நேற்று வியாழக்கிழமை இரவு திருட்டுப் போயுள்ளன. இவ்வீட்டிலிருந்து 50,000 ரூபா பணமும் 03 பவுண் நிறையுடைய  தங்கநகையுமே திருட்டுப் போயுள்ளன.

இவ்வீட்டு உரிமையாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பணமும் தங்கநகையும் திருட்டுப் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .