2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாயாரும் மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.பரன்

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான  மேற்படி யுவதி தான் நேசித்துவந்த நபரை திருமணம் செய்துகொண்டு கடந்த 04 மாதங்களாக  அவருடன் தனி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்,  நேற்று செவ்வாய்க்கிழமை தனது கணவரோடு ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்த யுவதி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளார்.

இதனை கேள்வியுற்ற மேற்படி யுவதியின் தாயார் அதிர்ச்சியுற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்று  தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .