2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மாற்றுவலுவுடையோரை சமூக மட்டத்தில் புனர்வாழ்வளிப்பதற்கான செயலமர்வு

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாற்றுவலுவுடையோரை சமூக மட்டத்தில் புனர்வாழ்வளிப்பதற்கான செயலமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சமூக சேவைகள் அமைச்சின் சீ.பி.ஆர் திட்டத்தின் கீழே இந்த செயலமர்வு இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் தலைமையில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இந்த செயலமர்வு  நடைபெற்றது.

இதில் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அதிகாரி வே.தபேந்திரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உளவள அதிகாரி தேவராஜா துஷ;யந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இச்செயலமர்விற்காக சமூக சேவைகள் அமைச்சு இலங்கையிலுள்ள  பிரதேச  செயலகப் பிரிவுகளுக்கு தலா 20,000 ரூபா நிதி ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .