2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வலி. கிழக்கில் பார்த்தீனியச் செடிகள் அழிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலி. கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பார்த்தீனியச் செடிகள் அழிக்கப்பட்டன.

யாழ். கோப்பாய் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு அருகிலிருந்து  பார்த்தீனியச் செடிகள் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் நீர்வேலி, உரும்பிராய், புத்தூர், அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளதாக வலி. கிழக்கு பிரதேச சபையின்  தவிசாளர் அ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பார்த்தீனியச் செடிகள் அழிப்பு  நடவடிக்கையில்  கோப்பாய் பிரதேச சபை உப அலுவலக பணியாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .