2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்கள் துண்டிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

வடமராட்சி பிரதேசத்தில் மின் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்கள் இன்று திங்கட்கிழமை முதல் துண்டிக்கப்பட்டு வருவதாக வடமராட்சி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் க.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

"வடமராட்சி பிரதேசத்தில் 10,000 ரூபாவிற்கு மேல் மின் கட்டணங்களை செலுத்தாமல் 700 பேர் வரையில் உள்ளனர். இவர்களுக்கு மின்சார சபையினால் மின் துண்டிப்பு அறிவித்தல் அனுப்பியும் அவர்கள் மின்சார கட்டணங்களை செலுத்தவில்லை.

இவர்கள் இன்று திங்கட்கிழமைக்குள் மின் இணைப்பிற்குரிய கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதினைத் தவிர்க்க முடியும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .