2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பேரூந்து மீது கல் வீசியவருக்கு விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தங்காலைக்குச் சென்ற பேரூந்து மீது நேற்று (08) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இதில் நால்வர் காயமடைந்திருந்தனர்.

இந்தக் கல்வீச்சுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (09) காலை கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, மேற்படி நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .