2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பரீட்சைக் கடமையில் ஈடுபடுவதற்கு சென்றிருந்த அதிபர் மரணம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.கே. பிரசாத்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமையில் ஈடுபடுவதற்கு சென்றிருந்த அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (10)  இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலயத்தின்  அதிபர் பசுபதி கணேசமூர்த்தி (47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கிளிநொச்சி, இராமநாதபுரம்  மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை கடமைகளில்  ஈடுபடுவதற்கு சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 02.20 மணியளவில் தனது உடலில் ஏதோ செய்கின்றது எனக்கூறிய அதிபர், சில நிமிடங்களில் உயிரிழந்ததாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவருடன்  இரவு உணவு உட்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அதிபர் திங்கட்கிழமை இரவு உண்ட உணவு விஷமானதால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமோ என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .