2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக றொகான் டயஸ் பதவியேற்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக றொகான் டயஸ் இன்று (12) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களின் குருமார்களின் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் ஆசிர்வாதங்கள் நடைபெற்ற நிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

தொடர்ந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கான பொலிஸ் அணிவகுப்பு மரியாதை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜெப்ரியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அணிவகுப்பு மரியாதையில் ஏற்றுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .