2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

முதியோர் இல்லப் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் வன்னேரிக் குளத்திலுள்ள முதியோர் இல்லத்தினை புனரமைப்பதற்கென ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத் தலைவர் தி.இராசநாயகம் இதனை இன்று (12) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வன்னேரிக் குளத்தில் முதியோர் இல்லம் கடந்த யுத்த காலத்தில் சேதமடைந்திருந்த போதும், இன்றுவரை அது புனரமைக்கப்படாமையினால் அந்த முதியோர் இல்லம் மீள ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது.

சேதமடைந்து காணப்படும் முதியோர் இல்லத்தினை முழுமையாக புனரமைப்பதற்கு முப்பது மில்லியன் நிதி தேவையாகவுள்ளது.

உடனடியாக முதியோர் இல்லத்தினை ஆரம்பித்து நடத்;துவதற்கு சமையல்கூடம், முதியோர் இல்லத்திற்குரிய ஒரு கட்டடம், தண்ணீர் வசதி என்பவற்றை அமைக்க வேண்டியிருப்பதினால் முதற்கட்டமாக 6 மில்லியன் நிதி கிடைத்தால் மீண்டும் முதியோர் இல்லத்தினை ஆரம்பிக்க முடியும்.

இந்நிலையில் மத்திய அரசினால் ஒரு மில்லியன் ரூபா நிதி தற்போது கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .