2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழிலிருந்து விடைபெறுகிறது அக்கிறிக்கோ மின்சார நிறுவனம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது.

1990ஆம் ஆண்டளவில் யாழ். மாவட்டத்திற்கான லக்ஷபான மின்சாரம் சேவை யுத்தத்தின் காரணமாக துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் 1995ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பாற்றியது.

யாழ்ப்பாணத்திற்கு மின்சாரத்தினை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் 2000ஆம் ஆண்டளவில் அக்கிறிக்கோ நிறுவனம் காங்கேசன்துறை மற்றும் சுன்னாகம் பகுதிகளுக்கு தனது மின்பிறப்பாக்கிகளை பொருத்தி யாழ்.மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

தற்போது இலங்கை மின்சார சபை யாழ்.சுன்னாகப்பகுதியில் பாரிய மின்பிறப்பாக்கி மற்றும் மின்மாற்றிகளைப் பொருத்தியதுடன்  லக்ஷபான மின்சாரத்துடன் இணைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அக்கிறிக்கோ நிறுவனம் தனது ஒப்பந்த காலம் முடிவடைந்ததனையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த தனது மின்பிறப்பாக்கிகளை ஏற்றுச்செல்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .