2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மண்டேலாவிற்கு யாழ். பல்கலையில் அஞ்சலி

Super User   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவின் உருவப்படம் பல்கலைக்கழக முன்றலிலுள்ள இராமநாதன் சிலையிலிருந்து மாணவர்களினால் ஊர்வலமாக கைலாசபதி கலையரங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவுத் தூபியில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இ.இராஜகுமாரன் தலைமையில் நினைவுப் பேருரையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .