2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் நடவடிக்கை; டி.ஜ.ஜி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் வாராந்தம் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளாக இருந்தாலும் அவற்றிற்கு பொலிஸார் இலஞ்சமாக  பணம் அல்லது ஏதாவது பொருட்களைப் பெற்றுக்கொண்டால் என்னிடம் தெரியப்படுத்துங்கள்.

அவ்வாறு தெரியப்படுத்தப்படும் பட்சத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இலஞ்சம் கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .