2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

குறைந்த கட்டணத்தில் பாரவூர்திகள் சேவையில்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மணல் ஏற்றிப்பறிப்பதற்கு அறவிடப்படும் வழமையான கட்டணத்தினை விட ரூபா 3 ஆயிரம் குறைவான கட்டணத்தில் சேவை வழங்கத் தயாராக இருப்பதாக யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கம் யாழ்.மாவட்ட அரச அதிபருக்குத் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற போதே, சங்க அங்கத்தவர்களினால் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தலைவர் ச.ஜெயகுமார் தெரிவித்தார்.

எமது சங்கத்தில் பதிவு செய்துள்ள பாரவூர்திகளுக்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக மணல் ஏற்றிப் பறிப்பதற்கான உரிய அனுமதியினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கும் பட்சத்தில், முன்னர் இருந்த கட்டணத்தினை விட 3 ஆயிரம் ரூபா குறைந்த கட்டணத்தில் தாம் சேவை வழங்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .