2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ புலனாய்வாளர் எனக் கூறியவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இராணுவப்புலனாய்வாளர் எனக் கூறி இன்னொருவரை மிரட்டியவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஜெகநாதன் கஜநிதிபாலன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். ஆவரங்கால் சிவன்கோவில் வீதி சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இராணுவ புலனாய்வாளர் எனத்  கூறிக்கொண்டு கடந்த சில வாரங்களாக அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த நபர் ஒருவரை தொலைப்பேசி மூலம் மிரட்டி வந்துள்ளார்.இந்த நிலையில் புலனாய்வாளர் என கூறும் நபர் நண்பனுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹெல்மட்டுடன் அணிந்த நிலையில் குறித்த அச்சுவேலி நபரின் வீட்டுக்குச் சென்று மிரட்டியுள்ளார்.

இதன்போது, ஹெல்மட்டுடன் வந்த நபரின் ஹெல்மட்டினை அச்சுவேலி வாசி விலக்கியபோது, அந்த நபர் யார் என அடையாளங்கண்டார். இதனைத் தொடர்ந்து, அச்சுவேலி வாசி குறித்த நபர் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த நபரை உடனடியாகக் கைது செய்த பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .