2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வலி.தென்மேற்கு பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரு.நாதன்

வலி.தென்மேற்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று (19) நிறைவேற்றப்பட்டது. பதில் தவிசாளர் ச.சிவகுமாரினால் வரவு – செலவுத் திட்டம், சபையில் முன்வைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது.

இதன்போது, சில உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்தில் சில விடயங்கள் திருத்த வேண்டும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தால் அது சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் உறுப்பினர்களால் ஒன்றிணைந்து முன்மொழியப்பட்ட சாவற்கட்டு யாவில் வீதி புனரமைப்புத் திட்டம் வரவு செலவுத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டமை குறித்து உறுப்பினர்களிடமிருந்து காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

அத்தோடு பற்றிமா வீதி 100 மீற்றர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள வீதி எங்குள்ளது? அதன் உண்மை நீளத்தை இட்டு இது சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டதை பதில் தவிசாளர் நிராகரித்தார்.

இதற்கு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன், கடந்த முறையும் இவ்வாறான தவறுகளால் தான் ஒப்பந்தக்காரர்களின் செலுத்துகைகளை மேற்கொள்ளவில்லை. எனவே திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படுமிடத்தே அவற்றை ஆதரிப்போம் என்றார்.

எனினும் அதனை ஏற்க மறுத்த ஆளுங்கட்சி உறுப்பினரொருவர், தலைவர் உட்பட 8 பேர் ஆதரவாகவுள்ளதாகவும் 5 பேர் எதிராகவுள்ளதாகவும் குறிப்பிட்டு வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .