2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குடும்பநல பணியாளர்களின் போராட்டம்

Super User   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


கடந்த இரண்டு தினங்களாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப நல பணியாளர்களின் போராட்டம் இன்று சனிக்கிழமை அவர்களின் பிரதேச வைத்தியதிகாரி பணிமனைகளின் முன்னாள் இடம்பெற்றது.

தமக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் குடும்பநல பணியாளர்கள், யாழ். பிராந்திய சுகாதார பணிமனை முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் யாழ்.பிராந்திய சுகாதார பணிமனை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை காரணமாக, பணியாளர்கள் தங்களின் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக தங்கள் பிரதேச வைத்தியதிகாரி பணிமனைகளின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .